சாதனை படைத்த கை விரல்களுக்கு வந்த சோதனை..!

Jul 13, 2018, 19:45 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்தவர் ஸ்ரீதர் சிலால். 82 வயதான இவர் 66 ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் ஆசிரியர் வளர்த்த நகத்தை உடைத்ததால் அவரின் கோவத்திற்கு ஆளான சிலால் அன்று எடுத்த சவாலாக நீளமான நகத்தினை வளர்க்க காரணமாக மாறியது. 

1952ம் ஆண்டில் இருந்து வளர்க்கப்பட்ட இவரின் இடது கை நகங்களின் நீளம் 909.6மீ. அதில் பெரு விரல் நகம் மட்டும் 197.8மீ ஆகும். உலகில் யாரும் இந்த அளவிற்கு நகம் வளர்த்ததில்லை. இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் சிலால். 

வயது முதிர்வால் இவரின் நகங்களை முன்பு போல பாதுகாக்க முடியாமல் தவித்து வந்தார் சிலால். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள "ரிப்ளே'ஸ் பிளிவ் ஆர் நாட்" என்ற மியூசியம் ஒன்று சிலாலின் நகத்தை பாதுகாக்க முன்வந்தது, அதற்கு சிலாலும் ஒப்புக்கொண்டார். தனது நகங்களை மியூசியத்தில் பாதுகாக்க விரும்பினார். 

இதற்காக புனேவில் இருந்து நியூயார்க் சென்றார். அங்கு அவரின் நகங்களை வெட்ட மியூசியத்தில் "நகம் வெட்டும் விழா" ஏற்பாடு செய்யப்பட்டது. சிலாலின் நகங்கள் வெட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. 

நகங்கள் வெட்டப்பட்டவுடன் பெரு மூச்சினை விட்டார் சிலால். ஆனால் சிலால் கை விரல்கள் பல ஆண்டுகளாக நகங்களுக்காக ஒரே நிலையில் வைத்திருந்ததால் வெட்டிய பின்பும் அதே நிலையில் நின்று விட்டது. மற்றவர்கள் போல் அவரால் சாதாரணமாக கை விரல்களை அசைக்க முடியவில்லை. இதனால் அவரின் இடது கை செயலிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading சாதனை படைத்த கை விரல்களுக்கு வந்த சோதனை..! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை