தமிழ்(அ)ப்பாவுக்கு ஓர் இரங்கற்பா ! --------------------------------------------- யாரும் அறியா அஞ்சுகத்துக்கு மகனாய்ப் பிறந்து ! ! பாரே அறியும் மகத்தான தலைவனாய் உயர்ந்து ! ! மன்னவர் பலரை கண்ட சாம்ராஜ்யங்கள் முன்னே ! ! சாம்ராஜ்யங்கள் பல கண்ட ஒரே மன்னவன் நீர் தானே ! ! உலகத்துக்கு ஒரே இமயம் எத்துனை உள்ளங்களில் நீர் இமயம் ! ! வசனத்தால் வசியம் செய்தாய் வசை பாடியோரும் உன்வசம் செய்தாய் ! ! ஆண்டவன் இல்லையென்று நாத்திகம் பேசினீரே அன்று ! ! பல உள்ளங்களை ஆண்டவனாய் மாண்டு போனீரே இன்று ! ! வெடி போல் வரும் விமர்சனங்கள் உன் பொடி வைத்த பேச்சில் பொசுங்கிடுமே ! ! சிலப்பதிகாரத்தை எளிமையாய் சொன்ன எழுத்துச்சிற்பியே சிம்மக்குரலுக்கு எழுத்தால் சிகரம்தந்த சிந்தனைச்சிற்பியே ! ! காற்றோடு கரைந்திட கற்பூரமா உன்புகழ் காலம் கடந்த காவியமன்றோ உன்புகழ் ! ! நீர் தலைநிமிர்ந்து ஏற்றிய மூவர்ணக்கொடி உமக்கு தலைகுனிந்து புகழ் பரப்புதே ! ! செப்புமொழி ஆயிரமாயினும் தமிழை செம்மொழியாக்கி ஆட்சி கொண்டாய் ! ! வெறும் மையால் இலக்கணம் பிறக்குமா ?. நீ இல்லா வெறுமையில் இனி தமிழகம் தழைக்குமா? மெரினா உன் விலாசமல்ல இனி மெரினாவுக்கே நீர் தான் விலாசம் ! ! - சு.சரவணக்குமார்