காந்தி நகர்: தந்தை இல்லாத 251 பெண்களுக்கு குஜராத்தை சேரந்த தொழிலதிபர் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்துள்ள சம்பவம் மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சவானி. இவர், தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற நன்மைகளை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இந்நிலையில், தந்தையை இழந்து வறுமையில் வாடும் 251 பெண்களுக்கு நேற்று சவானி ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட நிகழ்ச்சியில் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினருக்கும் அவரவர் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார்.
சவானி, கடந்த 5 ஆண்டுகளில் 824 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், 1300 பேருக்கு பொருளாதார ரீதியாகவும் உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து சவானி கூறுகையில், “தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என
கூறினார்.