வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் இராமலிங்க அடிகளார் அவர்கள். ஆன்மீகவாதியான இவர் சத்திய ஞான சபையை நிறுவியுள்ளார். கடவுள் ஒருவரே என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தியவர். வள்ளலாருக்கு எதிராக வழக்கு மன்றத்தில் வழக்கு தொடுத்தவரும் உள்ளனர்.
மேலும் வளரும் குழந்தைகளுக்கு சிறந்த அறிவுரைகளை கூறியுள்ளார். அவை என்னவென்று பார்ப்போம்.
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
இவற்றோடு வள்ளலாரின் சிறந்த கொள்ளைகளையும் பார்ப்போமா!
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
மத வெறி கூடாது.