ஏன் மதுரை மல்லிகை உலகெங்கிலும் மணக்கிறது?

பூக்கள் இந்திய கலாச்சரத்திலும் பராம்பரியத்திலும் இணைந்துள்ளது. ஒரு மனிதன் பிறப்பு இறப்பு காதல் வாழ்கையிலும் பூக்கள் பெரும் பங்கு வகின்றது. முல்லைக்கு தேர் குடுத்த மன்னன் வழ்ந்த நாடு இது. அப்படி நம் வாழ்கையோடு இணைந்த பூக்களின் ஒன்றான மல்லிப்பூவின் சிறப்பை பார்ப்போம்.

மதுரை என்றாலே மீனாட்சி அம்மனுக்கு அடுத்து நினைவுக்கு வருவது மல்லிப்பூ தான்.

மதுரை மல்லி மதுரையில் மட்டும் சிறப்பு அல்ல அத விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். மதுரை மல்லி பார்க்க அழகாக பருத்து உருண்டையாக வெண்மையான நிறத்தில் பளபளவென இருப்பது தனி சிறப்பு மற்ற ஊர்களில் விளையும் பூக்கள் சிக்கிரத்தில் வாடிவிடும் ஆனால் மதுரை மல்லி நெருக்கமான இதழ்களை கொண்டுள்ளதால் அவ்வளவு எளிதில் வாடிபோகாது. இரண்டு நாள்கள் வரை வாடாமல் இருப்பதால் காலையில் பறிக்கும் மல்லிப்பூ இரவு சிங்கப்பூரில் உள்ள சந்தைவரை செல்லும்.

மதுரை பக்கம் போனாலே விட்டு பெண்களுக்கு மல்லிப்பூ வாங்கிவராதவர்கள் இருக்க மாட்டார்கள். பூவின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து அதனை கட்டி விற்கும் விதம் "உருட்டு கட்டு" "பட்டை கட்டு" "கதம்பம்" மலை என விதவிதமாக பார்ப்பவர் மனதைக் கொள்ளைக்கொள்ளும்.

ரொமான்ஸ் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மல்லி தான் இதனை மகாபாரதம் மற்றும் காமசூத்ரா போன்ற பண்டைய வேதங்களிலே மல்லியின் சிறப்பு பற்றி கூறியுள்ளார்கள். பெவர்லி நிக்கோலஸ் "மதுரை மல்லிகைப் போல ஒரு கவர்ச்சியான் வசனை கிடையாது" என்று சொல்லியிருக்கிரார்.

பெவர்லி நிக்கோலஸ் குமரி முதல் காஷ்மீர் வரை இடங்கள் மக்களையும் பார்வையிட்ட ஆராய்ந்து இந்தியாவப் பற்றி " Verdict on india" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஜாஸ்மின் என்று உலக அளவில் பிரசிதிபெற்ற மல்லியின் வாசனை அனைவருக்கும் பிடித்ததால் உலக அளவில் கிராக்கி அதிகமாக இருக்கிறது.

மதுரை மல்லிகை பண்டைய தமிழ் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுவதால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் பல இடங்களில் வசிக்கும் இந்தியர்களின் குறிப்பாக தமிழர்கள் வாங்கும் பொருளாகயுள்ளது இதனால் தினமும் மதுரையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வாசனை திரவியம்,கோவில் மாலை, பெண்கள் தலையில் சூட மற்றும் மல்லி டீ வரை இன்னும் பல்வேறு வகையில் பயன்படும் மல்லிக்கான் டிமான்ட் அதிகமாகி கொண்டே இருக்கிறது தமிழகத்தில் மட்டும் (மதுரை சுற்று வட்டாரம்) 1200 ஹெக்டேர் பயிரடப்படுகிறது.

டன் கணக்கில் மல்லிகை விளைச்சல் செய்கிறார்கள், விலை சில இடங்களில் மாறுபட்டு இருக்களாம் சித்திரை முதல் ஆடி மாதம் அதிக விளைச்சல் இருப்பதால் விலை குறைவாக இருக்கும் கார்த்திகை முதல் மாசி வரை அதிக பனிபொழிவு இருப்பதால் விளைச்சல் குறைவாக ஆனால் விலை அதிகமாக இருக்கும்.

வெளி மாநிலங்களுக்கு மதுரை மல்லி நாற்றுகளையும் ஏற்றுமதி செய்கிறார்கள். ஜூலை ஆகஸ்ட் மாதம் மல்லிகைப்பூ பதியம் போட ஏற்ற மாதம் என்று கூறுகிறார்கள் மதுரை விவசாயிகள். மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் விளையும் மல்லிக்கு 2013ம் ஆண்டுக்கான புவிசார் குறியீடு அளித்து பெருமை சேர்த்துள்ளது.

இத்தனை லாபம் இருந்தும் இதன் பயன் முழுமையாக விவசாயிகளை சென்று அடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds