களைகட்டி வரும் சர்வதேச காற்றாடி திருவிழா

காந்தி நகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியதை அடுத்து, படுஜோராக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சர்வதேச காற்றாடி திருவிழா ஜனவரி 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் குஜராத்
மாநிலம் அகமதாபாத்தில் ஆண்டு தோறும் காற்றாடி திருவிழா நடைபெறும். இதற்காக தனி இடம் ஒதுக்கி உலகம் முழுவதில் இருந்தும் மக்கள் இங்கு வந்து கொண்டாடுவர்.

அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 29வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். உடன், கவர்னர் ஓ.பி.கோலி இருந்தார்.

இந்த காற்றாடி திருவிழா 8 நாட்களுக்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 17ம் தேதியுடன் முடிவையும்.

இந்த விழாவில், நாட்டின் 18 மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட வித்தியாசமான பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். பல விதமான பட்டங்கள் இங்கு பறக்கவிடுவதால் இதை காண ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.

29வது ஆண்டு சர்வதேச காற்றாடி திருவிழாவின் காட்சி இதோ..

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds