நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் 2-வது போட்டி மவுண்ட்கனுயில் இன்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் ரோகித் சர்மா (87), தவான் (66), கோஹ்லி (43),தோனி (48) ராயுடு (47) என ரன்களை விறுவிறுவென குவித்தனர்.
50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களைக் குவித்தது இந்தியா. 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் 40.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது நியூசிலாந்து. அந்த அணியில் அதிகபட்சமாக பிரேஸ்வெல் மட்டும் 57 ரன்கள் சேர்த்தார்.
இந்தியத் தரப்பில் சுழலில் மீண்டும் அசத்திய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சகால், புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அபாரமாக ஆடி 87 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேப்பியர் போட்டியைத் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று 5 போட்டிகள் தொடரில் 2 -0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்தியா.