ஒரு நாள் போட்டியில் 40-வது சதமடித்த கோஹ்லி - சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

by Nagaraj, Mar 5, 2019, 20:46 PM IST

நாக்பூரில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னந்தனியாக போராடிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்து ஒரு நாள் அரங்கில் 40 -வது சதமடித்த இரண்டாவது வீரரானார். சச்சின் (49) சாதனையை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இன்றைய போட்டியில் கேப்டன் கோஹ்லி மட்டுமே தன்னந்தனி ஆளாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.தமிழக வீரர் விஜய்சங்கர் (46) மட்டும் ஓரளவுக்கு பார்ட்ன ர்ஷிப் கொடுக்க 120 பந்துகளில் 116 ரன்களை விளாசினார் கோஹ்லி.

இது ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி அடித்த 40-வது சதமாகும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களில் சச்சினுக்கு (49) அடுத்தபடியாக 2-வது இடத்தில் கோஹ்லி உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் பத்து சதங்கள் தேவை என்ற நிலையில், நல்ல பார்மில் உள்ள கோஹ்லி அச்சாதனையை விரைந்து நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது


More Sports News