2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஏலத்தில் வீரர்களை வாங்க ஒரு அணி ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களின் விலை ரூ.80 கோடியில் இருந்து கழிக்கப்படும். ஒரு அணியில் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு அணி 25 வீரர்களை வைத்து கொள்ளலாம்.
ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்படியும் அஸ்வினை சென்னை அணியில் தக்கவைத்துக் கொள்ள முழு முயற்சியும் செய்வோம் என்று அறிவித்து இருந்தார். ஆனால், அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இதுவரை வீரர்கள் ஏலம் விவரம் இங்கே:
ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ.7.60 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
கிளென் மேக்ஸ்வெல் - ரூ.9 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ் அணி
கெய்ரன் போலார்ட் - 5.40 கோடி - மும்பை இந்தியன்ஸ் அணி
ஹர்பஜன் சிங் - ரூ.2 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
ஷாகிப் அல் ஹசன் - ரூ.2 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி
பிராவோ - ரூ.6.40 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
கவுதம் காம்பீர் - ரூ.2.80 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ் அணி
கனே வில்லியம்ஸன் - ரூ.3 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி
கீரன் பொல்லார்ட் - ரூ.5.4 கோடி - மும்பை இண்டியன்ஸ் அணி
யுவராஜ் சிங் - ரூ.2 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
கருண் நாயர் - ரூ.5.60 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
கே.எல்.ராகுல் - ரூ.11 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
ஷிகார் தவான்- ரூ.5.20 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி
பென் ஸ்டோக்ஸ் - ரூ.12.5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
அஜிங்கியா ரஹானே - ரூ.4 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
மிட்செல் ஸ்டார்க் - ரூ.9.40 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
பாப் டு பிளெஸ்ஸிஸ் - ரூ.1.60 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
பிரண்டன் மெக்கல்லம் - ரூ.3.60 கோடி - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி
ஜாசன் ராய் - ரூ.1.50 கோடி - டெல்லி டேர் டேவில்ஸ் அணி
மணீஷ் பாண்டே - ரூ.11 கோடி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி
ஆரோன் பின்ச் - ரூ.6.2 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி