ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதும் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடந்த கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற்றாலும், உப்பு சப்பு இல்லாத போட்டியென்றே ரசிகர்கள் கருதினர்.
சென்னை அணி முதலில் களமிறங்கி அடித்து ஆடுவதையே ரசிகர்கள் விரும்பினாலும், தல தோனியின் திட்டமே வேறு விதமாக இருக்கிறது. தன்னிடம் உள்ள அணியை வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடும் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, எதிரணியினரை 100 ரன்கள் அல்லது 130 ரன்களுக்குள் சுருட்டி விட்டு, பின்னர் சேஸ் செய்து பொறுமையாக வெற்றிக் கனியை பறிக்கலாம் என நினைக்கிறார். அது பலித்தும் வருகிறது.
இன்றைய போட்டியிலும் தோனியின் இந்த ஃபார்முலா கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.
டாஸில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கே ரகானே, ”நாங்கள் முதலில் பந்து வீசுவது என்ற முடிவை செய்திருந்தோம். ஜெய்ப்பூர் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், தோனி டாஸ் வென்றதால், உஷாராக பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டார். எங்களிடம் உள்ள வீரர்கள் நல்ல ஸ்கோரை எடுப்பார்கள் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.
அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா – சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய ஹர்பஜன்!