நாங்கள் கவுதம் கம்பீரை மிஸ் செய்கிறோம் என்று நல்ல முறையில் வருவோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களுல் ஒருவரும், நடிகருமான ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2018ஆம் சீசனுக்கான வீரர்களின் ஏலம் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. கடந்த ஏழு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடினமாக உழைத்த கேப்டன் கவுதம் கம்பீரை ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.
ஏலத்தின் போது கொல்கத்தா அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்காதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல் நாளில் ஏலம் போகாத கம்பீரை இரண்டாம் நாள் ஏலத்தில் தில்லி டேர் டேவில்ஸ் அணி ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. கம்பீரை ஏலம் எடுக்காதது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ. வெங்கி, “தன்னை ஏலம் எடுக்க வேண்டாம் என்று கம்பீர் கேட்டுக் கொண்டதாக கூறியது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், கவுதம் கம்பீர் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஷாருக்கான், “நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும், மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷாருக்கான், “இளம் வீரர்களை ஊக்குவிப்பதும், நம்புவதும் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தத்துவம். நாங்கள் நல்ல முறையில் வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் கடந்த ஏழு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பதும், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.