ஒவ்வொரு முற்றியும் பேட்டிங் செய்யும் போது எந்த பந்தையும் சிறப்பாக அடிக்கவில்லை என்று எண்ணிக் கொள்வாராம் ஹர்திக் பாண்ட்யா.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது மும்பை அணி. இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். பின், களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வி அடைந்தது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்ட்யா, தான் பேட்டிங் செய்ய தொடங்கியவுடன் இதுவரை எந்த பந்தையும் சிறப்பாக அடிக்கவில்லை என்று தன்னுள் சொல்லிக் கொள்வாராம். அதோடு, வலைக்குள் மேற்கொள்ளும் கடினப்பயிற்சியே மைதானத்தில் எதிரொலிக்கிறது என்றவர், இறுதிக்கட்டத்திலும் அடிப்படை விதிகளை கடைப்பிடிப்பதால், நம் திறனை நம்பினால், பந்துவீச்சாளர்கள் தவறும்போது கட்டாயம் ஒரு ஹிட் அடிக்கலாம் என்று கூறினார்.