நானா ஃபார்ம்ல இல்ல… சென்னையில் விளாசிய வாட்சன் அதிர்ந்தது ஐதராபாத் அணி!

Shane Watson blasts Sunrisers Hyderabad and csk won the match

by Mari S, Apr 24, 2019, 08:38 AM IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலிங் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் மற்றும் மணிஷ் பாண்டே சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என மொத்தம் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்துவீச்சில் தோனி ஸ்டம்பிங் செய்ய அவுட்டானார்.

விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய மணிஷ் பாண்டே 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூப்ளசிஸ் 7 பந்துகளுக்கு 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். சுரேஷ் ரெய்னா மற்றும் வாட்ஸன் போட்ட பார்ட்னர்ஷிப் சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

ரெய்னா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரிகள் விளாசி 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஸ்டம்பிங் செய்ய விக்கெட்டை இழந்தார்.

மறுமுனையில், ஐதராபாத் அணி வீரர்களின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்ட ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் விளாசி, தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என நிரூபித்து 96 ரன்கள் எடுத்த நிலையில், பேர்ஸ்டோவிடம் டிப் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ் பொறுமையாக விளையாடி கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு சென்றனர். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் அம்பத்தி ராயுடு தேவையில்லாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அப்போதும் தல தோனி களமிறங்காமல் பிராவோவை அனுப்பினார்.

19.5 ஓவரில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றி 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர் தோல்வியை தவிர்ப்பாரா தல தோனி; டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை அணி!

You'r reading நானா ஃபார்ம்ல இல்ல… சென்னையில் விளாசிய வாட்சன் அதிர்ந்தது ஐதராபாத் அணி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை