உலகக்கோப்பை போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.எல்லா அணிகளும் அறிவிக்கப்பட்ட பின்பு இது கடைசி அணியாக அறிவிக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி தான். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் சுனில் நரேன். ஆனால் அவர் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து நரேன் பேசியுள்ளார். அதில், "எல்லோரையும் போலவே எனக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. சர்வதேச போட்டிகள் மற்றும் உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்கிறேன். என்னுடைய விரல்கள் இன்னும் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் தயாராகவில்லை. டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசினாலும் அது கடினமாகவே இருக்கிறது. இதுவே என்னை சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் செய்கிறது. இருப்பினும் உலகக் கோப்பை போட்டிக்கான அணி தேர்வில் என்னையும் பரிசீலித்து என் மீது தேர்வு குழுவினர் வைத்த நம்பிக்கையை தெறியபடுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளார்.