நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான நெய்மர், போட்டியின் நடுவர்களை ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள 3 கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அணியின் பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர். தற்போது பாரீஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணிக்காக விளையாடி வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிரிக்கெட்டில் மூன்றாவது அம்பயர் போன்று, கால்பந்தாட்டத்தில் வீடியோ ரெஃப்ரி கடைசி நிமிடத்தில் கொடுத்த பெனால்டி வாய்ப்பால் மான்செஸ்டர் யுனைடெட் அணி நெய்மரின் பிஎஸ்ஜி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த நெய்மர், கால்பந்தாட்டம் குறித்து ஒன்றுமே தெரியாத 4 பேர் டிவி பெட்டிக்கு முன் உட்கார்ந்து கொண்டு போட்டியை கெடுத்துவிட்டனர் என்று வசையபாடிய நெய்மர் ஆபாசமாகவும் திட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
போட்டி நடுவர்களை ஆபாசமாக திட்டிய விவகாரத்தை விசாரித்த கால்பந்தாட்ட குழு நெய்மருக்கு ஐரோப்பியாவில் நடைபெறவுள்ள மூன்று முக்கிய போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளனர்.