இறுதிசுற்றுக்கு முன்னேறப்போவது யாரு? டாஸ் வென்று பந்துவீசுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் குவாலிஃபையர் 2 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டி வரும் இளம் வீரர்கள் நிறைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதால், இந்த போட்டியிலும், இறுதிப்போட்டியிலும் வென்று முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் குவாலிஃபையர் 1 போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை இறுதிப்போட்டியில் பழிவாங்க இன்றைய போட்டியில் வென்று ஃபைனல்ஸுக்கு செல்ல வேண்டும் என்பதால், இரு அணிகளுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கும்.

இன்றைய போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்றும், இறுதிப் போட்டிக்கு சென்று யார் வெற்றிப் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இரு அணி ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு மே 12ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும். பேட்டிங் ஆர்டரில் வலுவாக இருக்கும் டெல்லி அணியை பவுலிங் ஆர்டரில் வழுவாக இருக்கும் சென்னை அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds