இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரிமியன் லீக் போட்டி மூலம் இதுவரை சுமார் ரூ.12ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதற்கான வரி மட்டும் ரூ.3500 கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக கருதப்படும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் போட்டியின் மூலம் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வருமானத்தை குவித்து வருகிறது.
2008-ல் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அறிமுகம் ஆனது முதல் பிசிசிஐயின் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வணிக ரீதியான போட்டி அதிகம் இருப்பதால் ஐபிஎல் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரித்துறை வரிவிலக்கு வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டி தொடருக்கு மட்டும் வருமான வரியாக சுமார் ரூ.3500 கோடியை பிசிசிஐ செலுத்தியுள்ளது.