உலகக் கோப்பை கிரிக்கெட் ; வழக்கம் போல பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது. விளையாட்டிலும் எதிரிகளாகி விட்ட இந்த இரு நாட்டு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின் மோதுவதால் போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம் என்றாலும், புள்ளி விபரங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் வழக்கம் போல் பாகிஸ்தானை பந்தாடுவது நிச்சயம் என்றே இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

ஆனால் மழையின் மிரட்டலால் இந்தப் போட்டியும் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ள ரசிகர்கள், வருண பகவானே கருணை காட்டப்பா என்று இப்போதே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே, ஏதோ யுத்த களத்தில் குதித்துள்ளது போல் இரு நாட்டு ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து விட்டது எனலாம். ஏனெனில் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் அதிகரித்து, இவ்விரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டித் தொடரில் பங்கேற்பதும் அடியோடு நின்று விட்டது. இதனால் அத்தி பூத்தாற்போல, இவ்விரு நாடுகள் தவிர்த்து வேறு நாடுகளில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன.

கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் துபையில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதற்குப் பின் 9 மாத இடைவெளியில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. உலகக் கோப்பை போட்டி தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றாலே பாகிஸ்தானுக்கு கிலி பிடித்து விடும் என்பது தெரிந்த சங்கதி தான். ஏனெனில் கடந்த 1992 முதல் நடைபெற்றுள்ள 6 உலகக் கோப்பை தொடரில், இரு அணிகளிடையே நடைபெற்ற 6 போட்டிகளிலுமே பாகிஸ்தான் படுதோல்வியையே சந்தித்துள்ளதுதான் இதற்கு காரணம்.

அது மட்டுமின்றி கடந்த 15 ஆண்டுகளில் இரு அணிகளும் சொற்ப எண்ணிக்கையிலான போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தாலும், இந்தியாவின் எழுச்சி அமோகமாக உள்ளது. 2005 காலக்கட்டத்திற்கு முன் பாகிஸ்தானே அதிக போட்டிகளில் வென்ற அணியாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் இந்திய வீரர்களின் தேசப்பற்று சொல்லி மாளாது. உயிரைக் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் ஆடி 2006-க்குப் பிறகு நடைபெற்ற 30 போட்டிகளில் 19-ல் வென்று இந்தியா எழுச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதாை த்தில் நாளை இரு அணிகளுக்கும் இடையேயான பெரும் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களுக்கும் இப்போதே ரத்த அழுத்தத்தை எகிறச் செய்துவிட்டது எனலாம். ஆனாலும் வழக்கம் போல உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி விடுவோம் என்ற ஒரு நம்பிக்கை இந்திய ரசிகர்களிடையே இருந்தாலும், தோற்று விடக்கூடாதே என்ற ஒரு பதைபதைப்பில் இந்திய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களிடையே தான் ஒரு ஆவேசம் காணப்படுகிறது. உலகக் கோப்பை எல்லாம் வேணாம். இந்தியாவை வென்றாலே உலகக் கோப்பையை வென்றது போல் தான் என வெறிக் கூச்சல் போட்டு, பாகிஸ்தான் வீரர்களை சூடேற்றி வருகின்றனர்.பாகிஸ்தான் ரசிகர்களின் இந்த போர்க்குரலுக்கு, அந்நாட்டின் கிரிக்கெட் ஜாம்பவனான வாசிம் அக்ரம் அணை போடும் வகையில், இது ஒன்றும் இரு நாடுகளிடையே போர் கிடையாது. விளை யாட்டை விளையாட்டாக பாருங்கள். விளையாட்டில் ஒரு அணி தோற்பதும், எதிர் அணி ஜெயிப்பதும் சகஜம். அதனால் விளையாட்டை அமைதியாக ரசித்துப் பாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மழையால் ஆட்டம் தடைபடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்கிறது . நாளையும் மழைக்கு அதிக வாய்ப்பு என வானிலை நிலவரம் அச்சுறுத்துகிறது. இதனால் வருண பகவான் கருணை காட்டி, போட்டிக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பிரார்த்தனை செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி' ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 3 புள்ளிகள் மட்டும் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்தியாவோ, 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என்றாகி 5 புள்ளி களுடன் 4-ம் இடத்தில் வலுவாக உள்ளது. நாளைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றால் முதலிடத்துக்கும் முன்னேறும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணாமூச்சி காட்டிய மழை... இந்தியா Vs நியூசிலாந்து போட்டி ரத்து

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Indian-cricket-wicket-keeper-ms-Dhoni-pulls-out-West-Indies-tour-decides-serve-army-2-months
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு
In-cricket-Substitute-players-permitted-to-batting-and-bowling-when-players-injured-ICC-announced
கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம்; சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி
CWC-England-won-the-world-cup-in-thrilling-match-against-New-Zealand
என்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...! இங்கிலாந்து
CWC-final-England-242-runs-New-Zealand-match-capture-Cup-first-time-history
உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்
England-vs-New-Zealand-CWC-final
உலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?
CWC--what-prize-amount-each-team
உலக கோப்பை 'திருவிழா' இன்றுடன் நிறைவு..! யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
CWC--what-is-the-prize-amount-for-each-team
உலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..?
20-year-old-Rashid-Khan-appointed-as-Afghanistan-captain-of-all-forms-of-cricket
20 வயதான ரஷீத்கான்.. ஆப்கன் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்
CWC-No-flight-tickets-to-return-home-team-India-stranded-in-England-till-Sunday
'நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல..' எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை
CWC-semifinal-England-beat-Australia-by-8-wickets-and-enters-to-final
ஜேசன் ராய் அதிரடியால் ஆஸி. பரிதாபம்; உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி
Tag Clouds