உலக கோப்பை பைனல் நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?

England vs New Zealand CWC final

by Nagaraj, Jul 14, 2019, 18:00 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும்.


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை போட்டி தொடரின் அரையறுதியில், இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை நியூசிலாந்து, அதிர்ஷ்டவசமாக வென்று பைனலுக்கு முன்னேறி விட்டது. அதே போன்று, மற்றொரு அரையிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்று கெத்தாக பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து .


கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து நாடு தான். ஆனால் இதுவரை கோப்பை வென்றதில்லை என்ற சோகத்தில் இருந்து வருகிறது.1979, 1987, 19923 ஆகிய 3 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது.இந்த முறை சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக களமிறங்கும் இங்கிலாந்து அணி, கோப்பையை வென்றே தீருவது என்ற வெறியில் உள்ளது எனலாம்.


நியூசிலாந்து அணியும் இதுவரை கோப்பை வென்றதில்லை. கடந்த 2015-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்த சோகத்தில் உள்ள நியூசிலாந்து, அரையிறுதியில் இந்தியாவை எதிர்பாராதவிதமாக வென்ற கூடுதல் சந்தோஷத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியில் 2015 உலக கோப்பை பைனலில் களம் கண்ட வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்டில் போன்ற அனுபவ வீரர்கள் இன்று தங்கள் திறமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்த தவற மாட்டார்கள் என்பது நிச்சயம். எப்படி இருந்தாலும், இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக கோப்பை வென்ற அணி என்ற சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கிரிக்கெட் உலகின் மிகப் பழம் பெருமை வாய்ந்த புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு விளையாடி வருகிறது.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை