மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இந்தியா தடுமாற்றம்

by Nagaraj, Aug 30, 2019, 23:05 PM IST

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தடுமாறி வருகிறது.

கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் களமிறங்கினர்.

ஓபனிங் இறங்கிய லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி, மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சில் திணறல் தொடக்கத்தை தந்தனர். இந்தப் போட்டியிலும் சோபிக்கத் தவறிய ராகுல் 13 ரன்களில் ஹோல்டரிடம் அவுட்டானார்.தொடர்ந்து வந்த புஜாராவும் 6 ரன்களில் கார்ன் வெல்லடம் வீழ்ந்தார். பின்னர் வந்த கேப்டன் கோஹ்லி, மேலும் விக்கெட் விழாமல் இருக்க தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினார்.

இதனால் உணவு இடைவேளையின் போது 30 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற நிலையில் ஆடி வருகிறது. கோஹ்லி 29 பந்தில் 5 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 99 பந்தில் 5 பவுண்டரி உட்பட 41 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.


Leave a reply