ஃபிளிப்கார்ட் தளத்தில் குவல்காம் ஸ்நாப்டிராகன் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 31ம் தேதியுடன் இந்த விற்பனை நிறைவுபெற உள்ளது.
கூகுள், ஸோமி, விவோ, ரியல்மீ, அஸூஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்பான ஸ்மார்ட்போன்கள் இந்த சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன.
கேமிங் ஸ்மார்ட்போன்:
ஸ்நாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ரெட் மேஜிக் 3 ரூ.35,990/- விலையிலும், பிளாக் ஷார்க் 2 ரூ.34,999/- விலையிலும் கிடைக்கின்றன. ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர் கொண்ட ஸோமி போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் 6/64 ஜிபி கொண்ட சாதனம் ரூ.17,999/- விலையிலும், 6/128 ஜிபி போன் ரூ.18,999/- விலையிலும் 8/256 ஜிபி போன் ரூ.22,999/- விலையிலும் கிடைக்கிறது.
ரூ.17,990/- விலைகொண்ட விவோ இஸட்1 ப்ரோ ரூ.14,990/- விலையில் கிடைக்கும். இது ஸ்நாப்டிராகன் 712 பிராசஸரில் இயங்கும். ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனின் 4/128ஜிபி திறனுள்ள அடிப்படை சாதனம் ரூ.17,999/-விலையில் கிடைக்கும். மாதத்திற்கு ரூ.2,834/- தவணையில் கிடைக்கும்.
ரூ.50,000/- விலை கொண்ட ஸ்நாப்டிராகன் 670 பிராசஸரில் இயங்கும் கூகுள் பிக்ஸல் 3ஏ எக்ஸ்எல் ரூ.39,999/- விலையில் கிடைக்கும். மாதம் ரூ.6,667/- தவணையில் இதை வாங்கலாம்.
ரெட்மி நோட் 7 ப்ரோ ரூ.13,999/- விலையிலும் ஸோமி ரெட்மி கே20 ரூ.21,999/- விலையிலும் கிடைக்கும். அஸூஸ் மேக்ஸ் ப்ரோ மி1 ரூ.7,499/- மற்றும் அஸூஸ் 6இஸட் ரூ.31,999/- விலைகளில் கிடைக்கும்.