ஒயிட்பால் கிரிக்கெட்டில் கோலி சிறந்த ஆட்டக்காரர் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு இடையான கிரிக்கெட் யுத்தம் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் எப்படி இருக்கும் என்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ரபாடா, இந்தியாவுக்கு எதிரான போட்டி மிகவும் கடினமானது மற்றும் சவாலானது.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ஒயிட்பால் கிரிக்கெட்டில் திறமையானவர். உலகளவில் ஒரு திறமையான பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்துவீசும் போது தான் பந்துவீச்சாளரின் திறமையும் வெளிப்படும். அந்த விதத்தில் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார்.
ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கோலியை புகழ்ந்த ரபாடா, வேண்டுமென்றே கோலி சிறந்த டெஸ்ட் பிளேயர் இல்லை என்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என கோலியின் ரசிகர்கள் இணையத்தில் ரபாடாவுக்கு எதிராக கண்டனங்களையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.