மீண்டும் இணையும் ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி !

by Mari S, Sep 11, 2019, 11:28 AM IST
Share Tweet Whatsapp

தர்பார் படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இயக்குனர் சிவா சூர்யாவை வைத்து படம் எடுக்க ஒப்புக்கொண்டதால் ரஜினி அடுத்த பட இயக்குனர் யார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாசே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 2020 பொங்களுக்கு ரிலீஸாக இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் புரோமொஷன்ஸ் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினி, இந்த படத்தில் அவரை பார்க்கும் போது அவரது பழைய படமான மூன்று முகம் போன்ற படங்கள் நினைவிற்கு வரும் என கூறப்படுகிறது.
இயக்குனர் சிவா ரஜினி அடுத்த படத்தை இயக்க இருந்தார். ஆனால் சூரியாவை வைத்து இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டதால், ரஜினியை வைத்து அவரால் இயக்கமுடியவில்லை. இதனிடையில் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்விக்கு முற்றுபுள்ளி வைத்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதால்.
ரஜினியின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் ரஜினியிடம் கூறி சம்மதம் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a reply