இந்திய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கும் சீனியர் அணி வீரர்களுக்குத் தரும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற டிராவிட்டின் கோரிக்கைக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய இளம் அணியினர் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் வென்று சாதனைப் படைத்தனர். இந்த அணியை குருவாக நின்று பயிற்சியாளராகச் செயல்பட்டார் ராகுல் டிராவிட். இந்திய இளம் படையினர் நியூசிலாந்து மண்ணில் வெற்றி வாகை சூடி வந்ததும் பேரும், புகழும், பரிசுகளும் குவிந்தன. இவையனைத்துயும் இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-யும் அறிவித்தது.
ஆனால், இவையனைத்தையும் ஒரேயடியாக மறுத்துவிட்டார் பயிற்சியாளர் டிராவிட். மேலும் பரிசுப் பொருள்களுக்குப் பதிலாக 'சீனியர் அணியினருக்குத் தருவது போல் எங்கள் அணி வீரர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வேண்டும்' என்ற கோரிக்கையை பிசிசிஐ-யிடம் முன்வைத்தார். இதையடுத்து ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிசிசிஐ அந்தக் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாகவும் அறிவித்துள்ளது.