பேட்மின்டன் களத்தில் சர்வதேச அளவில் நம்பர் 1 ஆவதே லட்சியம் என இந்தியாவின் பி.வி.சிந்து சபதம் எடுத்துள்ளார்.
இந்திய பேட்மின்டனின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து விரைவில் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார்.
இதுகுறித்து சிந்து கூறுகையில், “முதன்முதலாக எட்டு வயதில் பேட்மின்டன் விளையாடத் தொடங்கியபோது விரைவில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியம் கொண்டு விளையாடத் தொடங்கினேன். இன்று இந்தியாவுக்காக விளையாடி வருகிறேன். விரைவில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பதே லட்சியம்” என்றார்.
மேலும், தனது பலம் குறித்து கூறுகையில், “எனது ஆரம்ப கால போட்டிகளிலிருந்து இன்று வரையில் எனது அம்மாதான் எனக்குப் பலமாக இருக்கிறார். இன்று சர்வதேச அளவில் பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருக்கிறேன். விரைவில் முதலிடத்தைப் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சியிலும் கடினமாக உழைத்து வருகிறேன்” என்றார்.