சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'காலா' திரைப்ப்டத்தின் டீசர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டா ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காலா'. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரித்து வழங்குகிறது.
திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிய வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிரடி கிளப்பிய அதே வேகத்தில் டீசர் வெளியீடு தேதியும் அறிவிக்கப்பட்டது.
மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'காலா' டீசர் வெளியீடு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஜெயந்திரர் காலமானதை அடுத்து 'காலா' வெளியீடு டீசர் தள்ளிவைக்கப்படுவதாகத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.
மேலும், ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்பதாகவும் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று வெளியாகவிருந்த 'காலா' டீசர் நாளை மார்ச் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.