அதிரடி ஆட்டக்காரர் கங்குலி தனது சுயசரிதையில் இந்தியக் கேப்டன் ஒருவர் குறித்த தனது புரிதலை நெகிழ்ச்சியாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் 'தாதா' ஆக நிலைப்பெற்றவர் சவுரவ் கங்குலி. இந்தியக் கிரிக்கெட் சங்கத்தில் முக்கியத் தலைமைப் பொறுப்பில் தற்போது கங்குலி பணியாற்றி வரும் சூழலில் தனது வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறார்.
'ஒற்றைச் சதம் போதாது' என்ற தலைப்பில் தனது சுயசரிதைய எழுதிவரும் கங்குலி, அப்புத்தகத்தில் தனது கிரிக்கெட் கால இனிமையான அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில், நம்ம 'தல' தோனி குறித்தத் தனது ஆரம்பக் கால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். கங்குலி, "இந்தியக் கிரிக்கெட் அணியில் நான் கேப்டனாக விளையாடியக் காலக்கட்டத்திலேயே தோனி இந்திய அணியில் இடம்பெற்று அறிமுகமானார்.
2004-ம் ஆண்டு முதன்முதலாக விக்கெட் கீப்பராக அறிமுகம் கொடுத்த தோனி முதல் நாளிலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தால் சிறந்ததொரு பேட்ஸ்மேனகவும் பட்டையைக் கிளப்பினார். இன்று தலைசிறந்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 2003-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையின்போது தோனி என் அணியில் இல்லாமல் போய்விட்டாரே என எண்ணியிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.