WWE என்று சொல்லப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து முதன்முறையாக கவிதா தேவி என்ற பெண்மணி நுழைந்துள்ளார்.
உலகம் முழுவதும் WWE என்று சொல்லப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இதில், பொதுவாக ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்து வருகின்றனர். ஆனாலும், இதில் பெண்களும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து கவிதா தேவி எனும் பெண் முதன் முறையாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். அவர், முன்னாள் பலுதூக்கும் வீராங்கனை, தெற்காசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றவரும் ஆவார்.
மேலும், முன்னாள் WWE சாம்பியன் தி கிரேட் காளி அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார். கவிதா தேவிதான் WWE-இல் நுழைந்த இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை ஆவார். இதற்கான ஒப்பந்தத்தில் தற்போது அவர் கையெழுத்திட்டு உள்ளார்.