வரும் ஐபிஎல் 2020 இல் இனி இவர் இல்லை ..!

Chennai Super Kings star player has withdrawn from IPL 2020

by Loganathan, Aug 29, 2020, 12:32 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் இந்தாண்டு கொரோனா காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 ல் தொடங்கவுள்ளது.இதில் முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்சின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா தனது குடும்ப காரணங்களால் இந்த சீசனின் ஐபில்2020 ல் இருந்து விலகினார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார்.சமீபத்தில் தான் மகேந்திர சிங் தோனியுடன் சேர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னை அணியின் நிர்வாகிகள் பத்து பேருக்கு கொரேனா பாசிட்டிவ் கிடைத்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை