வங்கதேசத்தின் நாகினி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தினேஷ் கார்த்திக்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான நிதாஷ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

Mar 19, 2018, 14:52 PM IST

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான நிதாஷ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை தேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், வங்கதேசம் தகுதிபெற்றன. போட்டியை நடத்தும் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

இதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் [15], லிட்டன் தாஸ் [11], சவுமியா சர்கார் [1], முஷ்பிஹுர் ரஹ்மான் [9] என அடுத்தடுத்து வெளியேற 68 ரன்களுக்குள் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்தது. இதில் 3 விக்கெட்டுகளை யுவேந்திர சாஹல் வீழ்த்தினார். இதனால், அந்த அணி 10 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த ஷபீர் ரஹ்மான், மஹ்மதுல்லா கூட்டணி அணியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தியது. பின்னர், மஹ்மதுல்லா 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷபீர் ரஹ்மான் அபாரமாக ஆடினார். அவர் 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இறுதிகட்டத்தில் ஹசம் மிராஷ் 7 பந்துகளில் 19 ரன்கள் அடுத்து அணியின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினார்.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கம் நன்றாகவே இருந்தது. ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தனர். பின்னர் தவான் 10, ரெய்னா 0, கே.எல்.ராகுல் 24, ரோஹித் சர்மா 56, மணீஷ் பாண்டே 28 என அவரவர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தினர்.

கடைசி சில ஓவர்களில் வங்கதேசத்தின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தார். அந்த ஓவரை ரூபல் ஹூசைன் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர், அடுத்த பந்தில் பவுண்டரி, அடுத்த பந்துல் சிக்ஸர், அடுத்த பந்தில் ரன் ஏதும் இல்லை. ஐந்தாவது பந்தில் 2 ரன்கள், கடைசி பந்தில் சிக்ஸர் என 22 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. சவுமியா சர்க்கார் வீசிய இந்த ஓவரின் முதல் பந்து வைடாகவும், மற்றொரு பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் விடப்பட்டது. இரண்டாவது பந்தில் ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட்டது.

இதனால், கடைசி மூன்று பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விஜய் சங்கர் பவுண்டரி விளாசியதோடு, ஐந்தாவது பந்தில் அவுட்டானார். கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தினேஷ் கார்த்திக் அணியை திரில் வெற்றிபெற வைத்தார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணியை வங்கதேச அணி வென்றதில்லை என்ற சோக முடிவை தக்கவைத்துக் கொண்டது. வங்கதேச வீரர்கள் இந்த தொடர் முழுவதும் வெற்றிபெற்ற பின்னர் நாகினி ஆட்டம் ஆடுவது வழக்கம். ஆனால், இந்த தோல்வியால் அவர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வங்கதேசத்தின் நாகினி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தினேஷ் கார்த்திக் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை