ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி இன்று ( 24-09-2020) இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது .இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகத் துபாய் மைதானத்தில் விளையாடியது . இதில் பெங்களூர் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் தனது முதல் வெற்றி வாய்ப்பை இழந்தது .கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதல் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கத் தயாராக உள்ளது. இந்த போட்டியில் எதிரணியில் விளையாடும் ராகுல் , கருண் நாயர் மற்றும் மயங்க் அகர்வால் போன்றோர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
RCB vs KXIP opening
இந்த இரு அணிகளைப் பொறுத்தவரைத் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தைக் கடந்த போட்டியில் வெளிப்படுத்தி உள்ளனர் . கிங்ஸ் லெவன் அணியின் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் களம் காணுவார்கள். கடந்த போட்டியில் 21 ரன்களில் அவுட் ஆன ராகுல் இந்த போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்தத் தயாராக உள்ளார் .
பெங்களூர் அணியைப் பொறுத்தவரைப் படிக்கல் மற்றும் பின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள் . இருவரும் அருமையான ஃபார்மில் உள்ளனர்.தொடக்க ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை இரு அணியும் சிறப்பாக உள்ளது.
RCB vs KXIP middle order
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கருண் நாயர் , நிகோலஸ் பூரான் மற்றும் க்ளன் மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் சோபிக்க தவறியது தான் தோல்விக்குக் காரணம் . இவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் பஞ்சாப் கேப்டன் ராகுல் மேக்ஸ்வெல்லை பந்து வீச்சிலும் பயன்படுத்தினால் அது அணிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும்.
பெங்களூர் அணியைப் பொறுத்தவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கோலி , டிவில்லியர்ஸ் தங்களின் அணியை எந்த கட்டத்திலும் இருந்து மீட்கும் திறமை படைத்தவர்கள் . மேலும் சுந்தரைச் சரியாகப் பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இரு அணிகளில் மிடில் ஆர்டரை பொறுத்தவரைப் பெங்களூர் சிறப்பாக உள்ளது. பஞ்சாப் மிடில் ஆர்டர் மீது கவனம் செலுத்தத் தவறினால் மீண்டும் தோல்வியைத் தழுவ நேரிடும்.
KXIP vs RCB all rounder
பெங்களூர் அணியில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பிளிப்பஸிற்கு பதிலாக மொயின் அலியைப் பயன்படுத்தினால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு . சுந்தர் மற்றும் துபே இருவரும் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தருவார்கள்.கிங்ஸ் லெவன் அணியில் மேக்ஸ்வெல் மற்றும் பிஷனோய் இடம் இந்த பணி உள்ளது . அதற்கு அந்த அணியின் கேப்டன் இவர்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
பெங்களூர் கேப்டன் கோலி இது வரை லெக் ஸ்பின் மற்றும் கூக்லி முறையில் அதிகமாகத் தனது விக்கெட்டை இழந்துள்ளார். எனவு இன்றைய போட்டியில் பிஷனோய் அந்த பணியைச் செய்ய வாய்ப்புண்டு .பெங்களுர் அணியின் சுழல் பந்து வீச்சாளரான சஹல் கண்டிப்பாகப் பஞ்சாப் அணிக்கு ஒரு சிம்மசொப்பனமாக இருப்பார் .
இரு அணியிலும் கடைசி ஓவர்இளை வீசச் சிறப்பான டெத் எண்ட் பந்து வீச்சாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறையாக உள்ளது . எனினும் இரு அணியிலும் இந்த பிரச்சினை உள்ளதால் , இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.எனவே மிகப்பெரிய ஸ்கோரை இரு அணிகளும் அடிக்க வாய்ப்புண்டு.
இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.