ஐபிஎல் லீக் சுற்றின் ஏழாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையே நடைபெற உள்ளது.சென்னை அணியைப் பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் விளையாடி மும்பை அணிக்கு எதிராக ஒரு வெற்றியையும் , ராஜஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியையும் சந்தித்தது. டெல்லியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகச் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது .
இந்நிலையில் இரண்டாவது போட்டியை சென்னைக்கு எதிராக துபாயில் ஆட உள்ளது. இந்த ஆடுகளத்தைப் பொறுத்தவரை அனைத்துவிதமான கணிப்புகளையும் , பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தவிடு பொடியாக்கினார் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல்.
CSK vs DC opening pair
சென்னை அணியைப் பொறுத்தவரை அவர்களுக்குச் சிறப்பான தொடக்க இணை அமையாதது பெரிய இழப்பாக உள்ளது . இரண்டு போட்டியிலும் சொதப்பிய முரளி விஜயை இந்த போட்டியில் விளையாட வைப்பாரா என்பது கேப்டனிடமே உள்ளது.
அப்படி முரளி விஜய் விளையாடாத பட்சத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு . தொடக்க இணையாக வாட்சன் மற்றும் பிளசில் இறங்க வாய்ப்புள்ளது.
டெல்லி அணியின் தொடக்க இணையைப் பொறுத்தவரைச் சிறப்பாகவே உள்ளனர். தவான் முதல் போட்டியில் சோபிக்க தவறினாலும். இந்த போட்டியில் கண்டிப்பாக ஒரு முக்கியமான இன்னிங்சை விளையாடுவார்.
CSK vs DC Middle orders
சென்னை அணியின் முதல் வெற்றிக்குக் காரணமாக இருந்த ராயுடு தோல் பட்டை காயத்தால் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை . இந்த போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமே ? எனவே சாம் கரண் , ஜடேஜா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். சாம் கரணை பொறுத்தவரை இந்த சீசனை சிறப்பாகத் தொடங்கியுள்ளார். ஜடேஜா போன ஆட்டத்தில் சரியாக சோபிக்கவில்லை அந்த நிலைமை இன்றும் தொடர்ந்தால் சென்னைக்கு அரோகதிதான்.கெய்க்வாடும் சிறப்பாகச் செயல்பட்டால் சென்னை அணி வெற்றி பெற வாய்ப்புண்டு.
டெல்லியைப் பொறுத்தவரை மிடில் ஆர்டரில் ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர் , ரிஷாப் பண்ட், ஸ்டேய்னஸ் போன்ற பெரிய பட்டாளமே உள்ளது . இவர்களை எதிர்கொள்வதே சென்னை அணிக்குப் பெரிய சவாலாக இருக்கும். அதுவும் ஸ்டேய்னஸ் போன்ற வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தும்போது அவர்களைச் சமாளிப்பதே அனுபவசாலிகளுக்கு மிகக் கடினமாக ஒன்றாக இருக்கும்.
CSK vs DC bowler
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சஹர் மற்றும் இங்கிடியின் பங்களிப்பு மிக முக்கியம். அவர்கள் உள்ளூர் ஆட்டத்தை விளையாடினால் போட்டியின் இறுதி வரை பந்தை மட்டுமே பொருக்க வேண்டி இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை பியூஷ் சாவ்லாவிற்கு பதில் இம்ரான் தாகிரை அணியில் இடம்பெறச் செய்யலாம்.
டெல்லியைப் பொறுத்தவரை ரபாடா நெருப்பாகப் பந்து வீசுவதால் , சென்னை வீரர்கள் இன்று அடிவாங்காமல் இருந்தால் சரி ! சுழல் பந்து வீச்சாளரான அஷ்வினும் காயம் காரணமாகக் கடந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். இருந்தும் நேற்று அவர் வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார் எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை . அவர் இல்லாத பட்சத்தில் அந்த இடத்தை அமித் மிஸ்ரா நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம் இந்த ஆட்டமும் மிகப் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். டெல்லி அணி முழுதும் இளம் வீரர்களும் , சென்னை அணி முழுதும் ஏகோபித்த அனுபவசாலிகளும் உள்ளதால் இந்த போட்டியில் விருவிருப்புக்குப் பஞ்சம் இருக்காது.