சிரிப்புடன் தொடங்குங்கள் கோல்கெட்டின் புதிய தொடக்கம், ட்ரீம்11 உடன்!

Start with a Laugh is Colketts new launch, with Dream 11!

by Loganathan, Oct 8, 2020, 19:03 PM IST

ஐபிஎல் 2020 ன் லீக் ஆட்டங்கள் தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன‌. இந்த ஆண்டின் டைடில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற ட்ரீம்11 பல்வேறான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. மேலும் ட்ரீம் 11 ஆஃப் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பல்வேறு போட்டிகளையும், பரிசுத் தொகைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் வாய்வழி பராமரிப்பில் சந்தையில் முதல் இடத்தில் உள்ள கோல்கெட் பால்மோலிவ் லிமிடெட் நிறுவனம் தங்களின் கீப் இந்தியா ஸ்மைலிங் எனும் முயற்சியில் ட்ரீம்11 2020 இருபது ஓவர் போட்டியில் 6 அணிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் கோல்கெட் நிறுவனத்தின் சந்தை படுத்துதல் துறையின் துணைத் தலைவர் திரு.அரவிந்த் சிந்தாமணி கூறியதாவது, இந்த ஆண்டு பலருக்கும் மறக்கமுடியாத நினைவுகளையும், நிலையில்லாத் தன்மையையும், பல கடினங்களையும் கொரோனா எனும் பெருந்தொற்று வழங்கியுள்ளது. இந்த சமயத்தில் தொடங்கப்பட்ட ஐபிஎல் 2020 பலரின் நம்பிக்கையை மெறுகேற்றி உள்ளது. எனவே நாங்கள் ட்ரிம்11 உடன் இணைந்து மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் "சிரிப்புடன் தொடங்குவோம்" என்ற செயல்பாட்டை 6 அணிகளுடன் சேர்ந்து தொடங்க உள்ளோம்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் ஆகும். இவற்றுடன் இணைந்து " Smile karoaurshuru ho jao ( சிரிப்புடன் தொடங்குவோம்) செயல்படுத்த உள்ளோம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை