டெஸ்ட் போட்டிகள் 400 விக்கெட்டுகளை இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார்.
தற்போது ஆக்லாந்து நடைபெறும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் டாம் லதாம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
31 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கொலும்புவில் நடந்த அந்த போட்டியில் சமிந்தா வாஸ் அவர்களை வெளியேற்றி தனது முதல் விக்கெட்டை பெற்றார். இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இதில் 15 முறை 5 விக்கெட்டுக்களும், 2 முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது வெறும் ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியவரும் இவரே!
இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 525 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக இயன் போத்தம் 383 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதலிடத்திலும், 708 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷேன் வார்னே இரண்டாவது இடத்திலும், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.