ஐபிஎல் 2020 சீசன் இந்தாண்டு கொரோனா தொற்றால் இந்தியாவில் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லாததால், கடைசி நிலையில் துபாயில் செப்டம்பரில் தொடங்கப்பட்டது.
இந்த சீசனின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 34 போட்டிகள் முடிந்துவிட்டன. இந்த சீசனின் மத்திய நிலையை அடைந்ததால் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனின் நடுவே வீரர்களை மாற்றிக்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த திட்டத்தை அணி உரிமையாளர்கள் எவரும் அவ்வளவாக விரும்பவில்லை. இதனால் வீரர்களை மாற்றிக்கொள்ளும் 5 நாள் திட்டம், எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நிறுத்தப்பட்டது.
ஆனால் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற அமெரிக்க பின்புலத்தை சார்ந்த அலி கான் காயம் காரணமாக விலகியுள்ளதால், நியூசிலாந்து அணியை சார்ந்த செய்ஃவர்ட் கொல்கத்தா அணியில் மாற்று வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.
1. அணியில் உள்ள வீரர்கள், மாற்று அணிக்காக விளையாடுவதை விரும்பவில்லை. இது அணி உரிமையாளர்களுக்கு எதிராக சென்றுவிடும் என்று வீரர்கள் கருதுகின்றனர்.
2. இது ஒரு தற்காலிகமான திட்டம் இவ்வாறு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அந்த வீரர்கள் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். அடுத்த சீசனில் அவர்கள் தனது தாய் அணிக்கே திரும்பி விட வேண்டும்.
3.வீரர்கள் மாற்றப்பட்டால் அணியின் திட்டங்கள் மற்றும் உத்திகள் எதிரணியால் பயன்படுத்த வாய்ப்புண்டு என அஞ்சுகிறார்கள்.
மேற்கூறிய காரணத்தால் "வீரர் மாற்று திட்டம்" நிறுத்தப்பட்டது என ஐபிஎல் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.