இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 27 முதல் ஜனவரி 19 ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தலா 3 டி20, ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதற்கான அணியை இன்று பிசிசிஐ அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூடி தேர்வு செய்தனர். அதன்படி, இந்திய அணியில் ஐபிஎல் களத்தில் சாதித்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேநேரம் ரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா இந்த தொடரில் இடம்பெறவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளாக ரோஹித் ஷர்மா மும்பை அணியில் விளையாடவில்லை. இதே காரணத்துக்காக தான் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் இடம்பெறவில்லை. எனினும் மருத்துவக்குழு தொடர்ந்து இவர்கள் இருவரையும் கண்காணித்து வருகிறது. உடல்நிலை சரியாகும் பட்சத்தில் இருவரும் ஆஸ்திரேலியா பயணமாவார்கள் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட். ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி
ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, மாயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் , மொஹமட். ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்
டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்) , ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமட். ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், மொஹமட். சிராஜ்
மேலும் கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியுடன் பயணம் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.