மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர்க்கு விரைவில் திருமணம் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது

by Nishanth, Nov 17, 2020, 18:27 PM IST

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் பஞ்சாப் அணி வீரருமான நிக்கோலஸ் பூரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவரது நீண்டகால காதலியான அலீசாவை மணக்க உள்ளார்.மேற்கிந்தியத் தீவு அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் குறிப்பிடத்தக்கவர் நிக்கோலஸ் பூரன். இவர் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். கே.எல். ராகுல் மற்றும் மாயங்க் அகர்வாலுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் அணியில் இவர் தான் அதிக ரன்களை குவித்துள்ளார். 14 போட்டிகளில் விளையாடி 353 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் அலிசா மிக்வேல் என்ற பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்து வந்தார். சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் இவர் தன்னுடைய காதலியை அழைத்து வந்திருந்தார்.இந்நிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் மேற்கிந்திய தீவிலுள்ள ட்ரினிடாடில் நடந்துள்ளது. இந்த தகவலை நிக்கோலஸ் பூரன் தான் சமூக இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளார்.

நிச்சயதார்த்த போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தன்னுடைய வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். 'கடவுள் எங்களை பரிபூரணமாக ஆசீர்வதித்துள்ளார். நானும் அலீசா மிக்வேலும் திருமணம் செய்து கொள்ளப்போவதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்' என்று பூரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் நிக்கோலஸ் பூரனுக்கு மேற்கிந்திய தீவு வீரர்களும், பஞ்சாப் அணி வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை