ஆரம்பமே ஏமாற்றம் தரும் லங்கா தொடர்!கலக்கத்தில் லங்கா கிரிக்கெட் வாரியம்!

Advertisement

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை போன்று, இலங்கையிலும் இந்த ஆண்டு முதல் எல்பிஎல் (LPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த எல்பிஎல் போட்டிக்கு My11circle ஸ்பான்சர்ஷிப் தரவுள்ளது. மேலும் ஐந்து அணிகளை கொண்டு இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த இருபது ஓவர் தொடர் இந்தாண்டு ஆகஸ்டில் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா நோய் தொற்றின் காராணமாக பலமுறை தொடர் தள்ளிபோடபட்டது. இறுதியாக நவம்பர் 5ல் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, தொடரை நடத்துவதற்கான முனைப்பை நிர்வாகம் எடுத்துள்ளது.

இந்த தொடர் 26 நவம்பர் முதல் 16 டிசம்பர் வரை நடைபெறவுள்ளது. மேலும் தொடர் முழுவதும் மகிந்தா ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அனைத்து நாட்களும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அரையிறுதி மட்டும் ஒரு நாளைக்கு ஒரு போட்டிகளாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர் Round-Robin மற்றும் Knockout முறையில் நடைபெற உள்ளது.

கொலம்போ கிங்ஸ், டம்புள்ளா வைகிங், காளே கிளாடியேட்டர்ஸ், ஜாப்னா ஸடாலியன்ஸ் மற்றும் கேன்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்குபெற உள்ளன. இந்த தொடருக்கு மொத்தம் 23 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருந்த, தென் ஆப்பிரிக்கா அணியின் பாப் டியூ பிளசில், டேவிட் மலான் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தேசிய அணிக்காக விளையாட இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

மேலும் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபிஸ், சர்வார்ஸ் கான் மற்றும் வஹாப் ரியாஸ் போன்றோரும் தேசிய அணி, நியூசிலாந்து செல்ல இருப்பதால் இவர்களும் தொடரை விட்டு வெளியேறினர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் குடும்பம் கேன்டி டஸ்கர்ஸ் அணியை ஏலமெடுத்துள்ளனர். இந்த அணியில் இடம்பெற்ற "யுனிவர்சல் பாஸ்" கிரிஸ் கெய்ல் இடம்பெற்று இருந்தார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பொருளாதார காரணங்களால் கெய்ல் அணியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் கேல்லி கிளாடியேட்டர்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான லஸித் மலிங்கா ம் தொடரில் இருந்து விலகியுள்ளது, தொடர் நிர்வாகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அணியில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட சர்ப்பாஸ் கான் விலகியதால், கேப்டனாக மலிங்கா செயல்ப்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் விலகியது அந்த அணிக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த தொடரின் தொடக்கத்தில் கொலம்போ கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வாட்மோர் சில காரணங்களால் தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு பதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கபீர் அலி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவருக்கும் கோவிட்-19 பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளதால் இவரும் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

வர்ணணையாளராக நியமிக்கப்பட்ட ஹர்ஷல் கிப்ஸ்க்கு " பசியோட இருந்தவனுக்கு, தலப்பாகட்டு பிரியாணி கெடச்ச கதையா" உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பல முன்னணி வீரர்களின் விலகலால் 2017 ல் இருந்து கிரிக்கெட் விளையாடமல் இருக்கும் முனாப் பட்டேலுக்கு இந்த இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையின் இந்த சீசனின் தொடக்கமே இந்த நிலையில் அமைந்துள்ளது, ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!

READ MORE ABOUT :

/body>