தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்கா சில சாதனைகளையும், ஆஸ்திரேலியா சில சோதனைகளையும் கொண்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்றன.
மூன்றாவது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பேன்கிராஃப்ட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் ஆகிய மூவரும் சிக்கி சீரழிந்தனர். இதனால், அவர்கள் பாதியிலேயே திரும்ப, போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 492 வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும் 612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியினர் 119 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா சாதனை:
* சர்வதேச அளவில் ஒரு அணி பெற்ற நான்காவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக 1928ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை 675 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 1934ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 1911ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
* தவிர கடந்த 15 மாதங்களில் 300 ரன்களுக்கு மேலான ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
* இந்த டெஸ்டில் வெர்னன் பிளாந்தார் இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 4ஆவது டெஸ்டில் மொத்தம் 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. டெஸ்டில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலிலும் இணைந்தார்.
மேலும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தைப் பிடித்தார். இங்கிலாந்தின் ஸ்டூவர் பிராட் 15/8 என்ற கணக்கில் முதலிடத்திலும், இங்கிலாந்தின் வெர்ஃபீல்ட் ரோட்ஸ் 17/7 என்ற கணக்கில் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹோல்டிங் 21/6 என்ற கணக்கில் மூன்றாவது இடத்திலும் உள்ளார்