ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் கேப்டனாக கலக்கு வருகின்றனர்.
ஏக மாற்றத்தோடு இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கியுள்ளது. வெறும் ஆட்டக்காரர்களாக ஆடி வந்த தினேஷ் கார்த்தி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக பொறுப்பேற்று உள்ளனர்.
கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் முதல் முதலாக கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்த காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு அணியை அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மேலும் பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 35 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டத்தை வெற்றிபெற செய்தார்.
அதேபோல, ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் மோதின. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு விக்கைட்டையும் கைப்பற்றினார். மேலும், அந்த 4 ஓவர்களில் ஒரு சிக்ஸர், பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை. குறைந்த வடிவிலான போட்டியில் இதுபோல் பந்துவீசுவது மிகவும் அரிதான விஷயம் தான்.
இருவரும் ஐபிஎல் போட்டிகளில் கலக்கிவருவதால் சென்னை அணியை தாண்டி ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கின்றனர்.