கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அபாயகரமான வீரர்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1 - 0 என முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. நாளை போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், அனுபவ வீரர்கள் இல்லை என்று இந்திய அணியை குறைத்து எடை போட்ட முடியாது. ஆட்டத்தை தங்கள் பக்கமாக திருப்பும் வல்லமை கொண்ட வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அபாயகரமான வீரர்கள். வாய்ப்பு கொடுத்தால் ஆட்டத்தையே தங்கள் பக்கமாக திருப்பும் வல்லமை கொண்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டாவது டெஸ்டில் பெரிய மாற்றத்துடன் இந்திய அணி விளையாட உள்ளது. குறிப்பாக கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் மாதிரியான வீரர்கள் கிரீஸில் நிலைத்து நின்று விட்டால் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார்.