ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்: 118 புள்ளிகள் பெற்று சாதனை!

by Sasitharan, Jan 6, 2021, 21:19 PM IST

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்று நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 118 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், இந்தியா அணி 114 புள்ளிகளுடனும் 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 106 புள்ளிகளுடனும் 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 96 புள்ளிகளுடனும் 5-வது இடத்திலும் உள்ளன.

பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து கேப்டனர் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி 322 புள்ளிகளையும், இந்தியா அணி 390 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இவற்றை முறியடித்து நியூசிலாந்து அணி தற்போடு 420 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும், சதவீதப் புள்ளிகளில் ஆஸ்திரேலியா 0.767% என்று முதலிடம் உள்ளது. தொடர்ந்து, இந்திய அணி 0.722% என்று இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து அணி 0.70% என்று 3-இடத்தில் உள்ளது.

You'r reading ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடம்: 118 புள்ளிகள் பெற்று சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை