வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி, உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்சில் மோசமான நிலையில் தவித்த இந்திய அணியை வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து நிமிர்ந்து இருக்க வைத்தார். தொடர்ந்து, 2-வது இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் 22 ரன்கள் அடித்து அணியில் வெற்றிக்கு துணயைாக நின்றார்.
மேலும், வாஷிங்டன் சுந்தர் ஆல்-ரவுண்டர் என்பதால், தனது பந்து வீச்சினால், இந்த டெஸ்டில் மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றியும் அசத்தினார். இதற்கிடையே, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தான். 4-வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட், போட்டி விறுவிறுப்பாக சென்ற சமயத்தில், அதிரடி ஆட்டத்தால் இலக்கை நோக்கி ஆட்டத்தை நகர்த்துகிறேன், மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி சுந்தர் அதிரடியாக விளையாடியதாக ரிஷப் பண்ட் புகழ்ந்துள்ளார். மேலும், வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.