இரண்டாவது டெஸ்ட்.. இந்தியா டாசில் வெற்றி பேட்டிங் செய்ய முடிவு

by Nishanth, Feb 13, 2021, 09:53 AM IST

சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.இங்கிலாந்து அணியுடன் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. அதிர்ஷ்டமான மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு கிடைத்த இந்த மாபெரும் தோல்வி இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், சிப்லி உள்பட பெரும்பாலான பேட்ஸ்மேன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆர்ச்சர், பெஸ் உள்பட பவுலர்களும் சிறப்பாக விளையாடினர். ஆனால் இந்திய அணியில் முக்கிய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. அஷ்வின் மட்டுமே நன்றாக ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இங்கிலாந்து இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், ஷஹ்பாஸ் நதீம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் பிராட், மொயின் அலி மற்றும் போக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனோவுக்கு பின்னர் இந்த டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக இந்தியாவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading இரண்டாவது டெஸ்ட்.. இந்தியா டாசில் வெற்றி பேட்டிங் செய்ய முடிவு Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை