வங்கசேத பெண் எழுத்தாளரை “வச்சு செஞ்ச” இங்கிலாந்து வீரர்கள்

by Sasitharan, Apr 8, 2021, 10:44 AM IST

இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி, இந்தாண்டு ஐ.பி.எல் 2021 தொடரில் சி.எஸ்.கே அணியில் விளையாட உள்ளார். மொயின் அலி தனது ஜெர்சியில் இருக்கும் மதுப்பான லோகோவை நீக்கும்படி வைத்த கோரிக்கையை சிஎஸ்கே ஏற்றதாக தகவல்கள் வெளியாகின. இது சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.

இதனிடையே, மொயின் அலி குறித்து வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், “மொயின் அலி ஒருவேளை கிரிக்கெட் வீரராக ஆகமால் இருந்திருந்தால் அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார்” என்று டுவிட்டரில் ட்விட் செய்துள்ளார்.

தஸ்லிமாவின் ட்விட்டை பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. அவரின் இந்த கருத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தற்போது, வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமாவிற்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் டுவிட்டரில் எதிர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் :-

“தஸ்லிமா நஸ்ரீன் நீங்கள் நலமாக தான் உள்ளீர்களா? எனக்கு அப்படி ஒன்று தோனவில்லை”

பவுலர் சகீப் மஹ்மூத்:-

“இது போன்ற அருவருப்பான கருத்துகளை ஏற்க முடியவில்லை”

விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ்:-

“தஸ்லிமா நஸ்ரீனின் ட்விட்டர் கணக்கு குறித்து தொடர்ந்து புகார் செய்து, அதனை முடக்க வேண்டும்” என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பென் டக்கெட்:-

“யார் வேண்டுமானாலும் எந்த அருவருப்பான விஷயங்களை ட்வீட் செய்கின்றனர். ட்விட்டர் செயலியில் இதுதான் பெரிய பிரச்னை. இவை மாற்றப்பட வேண்டும். அனைவரும் தஸ்லிமாவின் செயல் குறித்து புகார் அளியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

You'r reading வங்கசேத பெண் எழுத்தாளரை “வச்சு செஞ்ச” இங்கிலாந்து வீரர்கள் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை