ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தனது நாட்டில் சுமார் 70 கோடி ரூபாய்க்கு பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார். அவர் வாங்கியுள்ள பங்களா, விக்டோரியா காலத்து (1850-1870) கட்டடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்ட வீடாகும். சிட்னி நகரின் கடல் அழகு தெரியும்படி கடற்கரை அருகே இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. ஐந்து பெட் ரூம்கள் உள்ள அந்த வீட்டின் இன்டீரியர் டிசைன்களை இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டையும் வடிவமைத்த அர்னெட் அண்ட் பய்கே நிறுவனம் தான் வடிவமைத்துள்ளது.
அர்னெட் அண்ட் பய்கே நிறுவனம் வடிவமைத்தாலும், இன்டீரியர் டிசைன்களை முன்னின்று மேற்பார்வையிட்டவர் கம்மின்ஸின் காதலி பெக்கி பாஸ்டன் என்பவர் தான். பெக்கி பாஸ்டன் ஒரு இன்டீரியர் டிசைனர், காதலனுடன் சேர்ந்து வாழப்போகும் வீட்டை ரசனையுடன் கட்டி இருக்கிறார். வீடு முழுவதும் உலகின் சிறப்பான பொருட்களால் கொண்டு அலங்காரப்படுத்தியிருக்கார்கள்.
இந்த வீட்டின் வெளிப்புறத்தில் மிகப்பெரிய தோட்டம் ஒன்று உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல தோட்ட வடிவமைப்பாளர் பீட்டர் பட்ஜ் என்பவர் இந்த தோட்டத்தை வடிவமைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பிரபல உணவகமான இன்டிகோவின் உரிமையாளர் ஆன்டனி மோஸ்டகசிடம் இருந்து தான் கம்மின்ஸ் இந்த வீட்டைவாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.