நடப்பு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் பெரிதாக விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. நல்ல ஃபார்மில் அஸ்வின் இருந்தபோதிலும், சிறந்த ப பந்துவீச்சை வெளிப்படுத்தியபோதிலும் விக்கெட் மட்டும் வீழ்த்த முடியாமல் அஸ்வின் தடுமாறினார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் 4-வது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகினார், பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் விலகினார், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார்.
இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.