மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இனி நடத்தப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
50 ஓவர் வடிவிலான போட்டிக்கு ஒரு உலகக் கோப்பை இருக்கும் போது சாம்பியன்ஸ் கோப்பை தேவையா? என ஐசிசி மூத்த அதிகாரிகள் ஏற்கெனவே கேள்வி எழுப்பிருந்தனர்.
இது குறித்து விவாதிக்க ஐசிசி அதிகாரிகளின் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதி முடிவில் சாம்பியன்ஸ் டிராபி இனி நடத்தப்படாது எனவும், 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பதிலாக டி-20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.