தென்ஆப்ரிக்க டெஸ்ட் போட்டித் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் பும்ராவுக்கு இது முதல் அழைப்பு. பர்தீவ் பட்டேல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நியூலேண்டில் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 13ம் தேதி செஞ்சூரியனிலும் 3வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் 25ந்தேதியும் தொடங்குகின்றன.
டெஸ்ட் போட்டியில் 2016ம் ஆண்டு முதலே இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் 22 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 16ல் வெற்றி பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு, தாய்நாட்டில் நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. ஆனால், தென்ஆப்ரிக்க மண்ணில், அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதில்லை.
தென்ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி வீரர்கள்
விராட் கோலி (கேப்டன்) முரளி விஜய்., கே.எல். ராகுல், ஷிகர் தவான், ஷேட்டேஷ்வர் புஜாரா, ரஹானே(துணைக்கேப்டன்) , ரோகித் சர்மா விரித்திமான் சகா, அஸ்வின், ரவீந்த்ர ஜடேஜா, பர்தீவ் பட்டேல், ஹர்தீக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா.