டூர் ஆஃப் கலிஃபோர்னியா சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கொலம்பியாவின் எகன் பெர்னால் தட்டிச் சென்றார்.
அமெரிக்காவில் டூர் ஆஃப் கலிஃபோர்னியா சர்வதேச சைக்கிள் பந்தயமானது கடந்த 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இதன் 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி சுற்று பந்தயமானது 146கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. வழக்கம் போல் வீரர்கள் அனைவரும் ஒருசேர பந்தயத்தை தொடர்ந்து இலக்கை நோக்கி விரைந்தனர்.
போட்டி தொடங்கியது முதல் நெய்ல்சன், ஆடம் டி வாஸ், மிக்கேல் ஜெர்க், ஜானி க்ளார்க் ஆகியோர் தொடர்ந்து முன்னிலையை தக்கவைத்தனர். சமதளப்பாதையில் வீரர்கள் அனைவரும் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் வேகமாக விரைந்தனர்.
போட்டியின் முடிவு கட்டத்தில் ஃபெர்னாண்டோ காவெரியா - மேக்ஸ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் பந்தய இலக்கை 3மணி நேரம் 7 நிமிடங்களில் கடந்து ஃபெர்னாண்டோ வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தமாக 7சுற்றுகளின் முடிவில் கொலம்பிய வீரர் எகன் பெர்னால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com